நீரவ் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி உடைமைகளை ஏலத்தில் விட நடவடிக்கை

0 1548

கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, தொழிலதிபர் விஜய் மல்லையா, மற்றும் கடனை செலுத்த மறுக்கும் அனில் அம்பானி ஆகியோரின் மதிப்பு மிகுந்த உடைமைகளை ஏலத்தில் விற்கும் நடவடிக்கைகள் துவங்க உள்ளன.

நீரவ் மோடிக்கு சொந்தமான  கைக்கடிகாரம், ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளிட்ட உடைமைகள் ஏலம் விடப்பட உள்ளதாக அமலாக்கத் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்திய வங்கிகளுக்கு விஜய் மல்லையா செலுத்த வேண்டிய சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் கடனுக்காக, பிரெஞ்சு தீவு ஒன்றில் உள்ள அவரது ஆடம்பர பங்களா, சொகுசு சிறுகப்பல் உள்ளிட்டவற்றை ஏலம் விடும் முயற்சி நடக்கிறது..

3 சீன வங்கிகளிடம் இருந்து அனில் அம்பானி வாங்கிய சுமார் ஆறாயிரம் கோடி ரூபாயை திரும்ப வசூலிக்க லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணம் செலுத்தவில்லை என்றால் அவரது உடைமைகளும், சொத்துக்களும் ஏலத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments