TNPSC முறைகேட்டில் கைதான ஐயப்பனுடன் எந்த தொடர்பும் இல்லை - திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு

0 1447

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஐயப்பனுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 25 ஆண்டுகாலம் அரசியலிலும் 15 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய தன்னுடன் பலரும் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள் என்றும் அந்தவகையில் ஐயப்பன் தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் காட்டி அமைச்சர் ஜெயக்குமார் பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு குறித்து உயர்நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பாவு, இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேருக்கு நேர் தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என சவால் விடுத்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments