விஸ்வாசம் பட மீமை வைத்து காவலன் செயலிக்கு விளம்பரம்

0 6335

நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்பட காட்சியொன்றை மீமாக மாற்றி, தேனி மாவட்ட காவல்துறை, காவலன் செயலியை விளம்பரப்படுத்தியுள்ளது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அவசர காலத்தில் உடனடி பாதுகாப்பு அளிக்கும் வகையில், காவலன் எஸ்.ஓ.எஸ் என்ற மொபைல் செயலி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் வில்லன்களால் துரத்தப்படும் தனது மகள் கதாபாத்திரத்தை அஜித்குமார் காப்பாற்றும் காட்சியை மீமாக மாற்றியுள்ள, தேனி மாவட்ட காவல்துறை, செயலியில் உள்ள எஸ்.ஓ.எஸ். என்ற பட்டனை அழுத்தினால், போலீசார் விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என விளக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித் தேனி மாவட்டக்காரராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments