மத்தியப் பிரதேசத்தில் காணாமல் போன 4.5 லட்சம் கழிவறைகள்..!!

0 1050

வடிவேலுவின் கிணற்றைக் காணோம் என்ற காமெடியைப் போல, மத்திய பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாக கூறப்படும் நான்கரை லட்சம் கழிவறைகள் காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளது.

வறுமைக் கோட்டுக்கு சற்று மேலே இருக்கும் 62 லட்சம் குடும்பங்களுக்கு கழிவறைகளை கட்டிக் கொடுக்கும் பணி கடந்த 2012 ல் துவக்கப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில்  சுமார் நான்கரை லட்சம் கழிவறைகள் கட்டப்படாமல் கணக்கு காட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 540 கோடி ரூபாய் ஊழல் அம்பலமாகி உள்ளது. இதை அடுத்து அடுத்த கட்ட சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கழிவறைகளை கட்ட  ஊராட்சிகள் வழியாகவும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகவும் அரசு பணத்தை செலுத்தியது. அதில் அதிகாரிகளின் உதவியுடன் இடைத்தரகர்களோ, உள்ளூர் அரசியல் தலைவர்களோ ஊழல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. பல வீடுகளில் உரிமையாளருக்கு தெரியாமலேயே கழிவறைகள் கட்டப்பட்டதாகவும், பக்கத்து வீட்டு கழிவறைகள், 2012 க்கு முன்னர் கட்டப்பட்ட கழிவறைகள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து மோசடி நடந்துள்ளதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments