ஆஸ்கார் விருது பெற்ற ”பாரசைட்” திரைப்படம் பார்க்க முககவசத்துடன் செல்லும் மக்கள்

0 1753

ஆஸ்கார் விருது பெற்ற பாராசைட்  திரைப்படம் பார்க்க தென்கொரிய  மக்கள் முககவசம் அணிந்தவாறு தியேட்டருக்கு சென்று வருகின்றனர்.

தென் கொரியாவில் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்ற நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால், அந்நாட்டு மக்கள் தியேட்டர் போன்ற பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தனர்.

இந்த நிலையில் தென்கொரியாவின் பாராசைட் திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளதால், அப்படத்தை பார்க்க தற்போது தென்கொரியா மக்கள் முககவசம் அணிந்தவாறே தியேட்டருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

அங்குள்ள தியேட்டர்களும் தற்போது சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவதுடன், முககவசம் அணிவதன் அவசியம் குறித்த விழுப்பணர்வு படங்களும், கைகளை கழுவுவதற்காக ஆங்காங்கே ஹேண்ட் வாஷர்களும் பொதுமக்களுக்காக வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments