Close Up Shot எடுக்க முயன்றவரின் செல்போனை கடித்து குதறிய முதலை
பிரேசிலில் முதலையை மிக நெருக்கமாக படம் பிடிக்க விரும்பியவரின் செல்போனை அதே முதலை கடித்துக் குதறிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
அந்நாட்டின் தெற்குப் பகுதியில் புளோரியா நோபிள்ஸ் என்ற இடத்தில் ஆற்றில் ஏராளமான முதலைகள் வசித்து வருகின்றன.
இதனை நெருக்கமாக படம் பிடிக்க விரும்பிய ஒருவர் தனது டேப்லட் வகை செல்போனை கயிறு கட்டி இறக்கினார்.
இதனைக் கண்ட முதலை ஒன்று அதனைக் கடிக்க முயன்றது. அப்படியும் ஆபத்தை உணராத அந்த நபர் மீண்டும் டேப்லட்டை இறக்கி முதலையைப் படம் பிடிக்க முயன்றபோது, எகிறிக் குதித்த முதலை ஒன்று அதனைக் கவ்வி இழுத்தது. இறுதியில் டேப்லட் முதலையின் வாய்க்குள் சென்று விட, அந்த நபர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
Comments