கைக்குட்டை போல் கைக்கு அடக்கமாக வருகிறது சாம்சங் மொபைல்
மடித்து வைக்கத்தக்க புதிய வகையான மாடலில் 5 ஜி செல்போனை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.
சாம்சங் கேலக்சி Z philip என்றழைக்கப்படும் இந்த கையடக்கமான செல்போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. நேற்று இந்த செல்போன் அதிகாரப்பூர்வமான முறையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் வெளியிடப்பட்டது.
அல்ட்ரா தின் கிளாஸ் எனப்படும் மெல்லிய கண்ணாடித்திரை போன்ற பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த செல்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிளெக்ஸ் மோடு வசதி கொண்டிருப்பதால் தாமாகவே நான்கு அங்குலம் திரையானது இருமடங்காக விரிந்துவிடுவதால் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. வேண்டாத ஆப்களை தொடுதிரை மூலம் இழுத்து செயலிழக்க வைக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த புதிய செல்போன் கொண்டுள்ளது.
வரும் 14ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த மாடல் செல்போனின் விலை 1380 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கேலக்சி வரிசையில் மேலும் 3 புதிய மாடல்களை சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.
Comments