ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை
இந்தியா, வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கயா அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே உயர்நிலை அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேறி இங்கு குடியேறிய ரோஹிங்கயாக்களில் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்த அவர், அவர்களை மீண்டும் திருப்பி அனுப்புவது தொடர்பான பிரச்னையில் வங்கதேச அதிகாரிகளுடன் உயர்நிலை அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தற்போது, ரோஹிங்கியாக்களின் முழுத்தகவல்களையும், பயோமெட்ரிக் விவரங்களையும் சேகரிக்கவும், அவர்கள் முறைகேடாக வைத்துள்ள போலி இந்திய ஆவணங்களை ரத்து செய்யவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அந்த பதிலில் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.
Comments