குழந்தைகளின் ஆபாசப்படங்கள் பரவுவதை தடுக்க இது தான் வழி - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

0 1702

குழந்தைகளின் ஆபாசப்படம், பலாத்கார வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க வாட்ஸ் அப், கூகுள் நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பான பிரஜ்வாலா சார்பில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் பலாத்காரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என வாதிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி, சமூக வலைதளங்களில் பலாத்காரம், ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க, மத்திய உள்துறை சம்மந்தப்பட்ட இணையதள நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் இது தொடர்பான அறிக்கையை தன்னார்வ அமைப்பின் வக்கீல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments