விண்வெளிக்கு அப்பால் இருந்து வரும் மர்மமான ரேடியோ சிக்னல்கள் - வேற்று கிரகவாசிகளா ?
விண்வெளிக்கு அப்பால் இருந்து மர்மமான ரேடியோ சிக்னல்கள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஃஎப் ஆர் பி எனப்படும் அதிவேக ரேடியோ அலைவரிசைகள் ஆற்றல் மிக்கதாக வருகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ரேடியோ சிக்னல்கள் 50 கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக கடந்த 2018 செப்டம்பர் மற்றும் 2019 அக்டோபர் மாதங்களில் கனடாவில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆய்வு மையம் ஒவ்வொரு 16 நாட்களுக்கு ஒரு முறை இதுபோன்ற அதிவேக ரேடியோ சிக்னல்கள் வருவதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலையில் விண்வெளியில் இருந்து புதிதாக 8 ரேடியோ சிக்னல்கள் வருவதையும் கண்டுபிடித்துள்ள வானியல் ஆய்வாளர்கள், இத்தகைய சிக்னல்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
Comments