சிறுமிகளின் ஆபாசப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தவன் கைது

0 2284

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சிறுமிகளின் ஆபாசப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தவனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி என்பவன் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் உள்ள ஓட்டல்களில் பணிபுரிந்து வந்துள்ளான். அப்போது ஆபாச இணையதளங்களில் இருந்து சிறுமிகளின் ஆபாசப்படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து, தனது போலியான முகநூல் பக்கத்திலும், வாட்ஸ் அப்பிலும் அதனை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட காவல்துறையின் சமூக ஊடகவியல் பிரிவினர், சமூக ஊடகங்களை கண்காணித்து வந்தபோது குருசாமியின் இந்த செயலை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து குருசாமியை ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்ததோடு அவனது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments