7 பேர் விடுதலையை விரைவுபடுத்த முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை

0 1044

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது, ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து இரு வாரத்தில் பதிலளிக்குமாறு அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமைச்சரவை தீர்மானம் மற்றும் மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் "குட்டு" வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுக்குமாறு ஆளுநரை வலியுறுத்தி, ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments