7 பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

0 1044

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் பேரறிவாளன் மனு மீதான விசாரணை நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு முன் வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், ஆளுநருக்கு நீதிமன்றத்தால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் கூறினர்.

7 பேர் விடுதலை குறித்த கோப்பு ஆளுநர் முன்பு ஏன் இத்தனை மாதம் நிலுவையில் உள்ளது என கேள்வி எழுப்பி நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments