டெல்லி அளவுக்கு சென்னையில் காற்று மாசு - ஆய்வில் அதிரிச்சி தகவல்
சென்னையில் இயக்கப்படும் வாகனங்களும் டெல்லி அளவுக்கு காற்றுமாசை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக, வாகனங்களால் காற்றுமாசு ஏற்படும் நகரங்களின் பட்டியலில் சென்னைதான் உள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் வாகனங்களால் 3,200 டன்கள் கார்பன் டையாக்ஸைடு (CO2) உற்பத்தியாவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வு முடிவில், கார்பன் டையாக்ஸைடு மட்டுமல்லாமல், சென்னையில் நாள்தோறும் 1000 கிலோ கிராம் அளவுக்கு காற்றில் மாசு கலப்பதாகவும், 12,000 கிலோ கிராம் அளவுக்கு நைட்ரோஜன் டையாக்ஸைட் கலப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments