ககன்யான் திட்டத்தில் நிலவுக்குச் செல்லும் வீரர்களுக்கு பயிற்சி துவங்கியது

0 1189

நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பங்கேற்கும் 4 பேருக்கான 12 மாத கால பயிற்சி ரஷ்யாவில் துவங்கியது.

2022 ல் மேற்கொள்ளப்படவுள்ள இந்த பயணத்திற்காக இந்திய விமானப்படையின் போர் விமானிகள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி மாஸ்கோவில் உள்ள ககாரின் விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் (Gagarin Research & Test Cosmonaut Training Center (GCTC) துவங்கியுள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான  ரஷ்காஸ்மோஸ் (Roscosmos) தெரிவித்துள்ளது.

ஒரு வருடம் நீடிக்கும் இந்த பயிற்சியின் போது பயோமெடிக்கல் டிரெயினிங், உடற்திறன் மேம்பாடு உள்ளிட்ட முழுமையான பயிற்சி அளிக்கப்படும். சிறப்பு 76 MDK விமானத்தில் புவியீர்ப்பு இல்லாத எடை இழப்பு  நிலை குறித்த குறுகிய கால பயிற்சியும், நிலவில் அசாதாரண நிலையில் இறங்க நேர்ந்தால் சமாளிக்க வேண்டிய பயிற்சியும் வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments