டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் வெற்றிக்காக டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, அமைய உள்ள ஆம் ஆத்மி ஆட்சி, டெல்லி மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தமது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் 3 இடங்களை மட்டும் பிடித்த பாஜக இந்த தேர்தலில் அதை 8 ஆக அதிகரித்துள்ளதுடன், தனது வாக்கு சதவிகிதத்தையும் 32 ல் இருந்து 39 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. .
Comments