டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை பாஜக ஏற்றுக் கொள்கிறது: ஜே.பி. நட்டா
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள பதிவுகளில், டெல்லி சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும் என்றும், சட்டப்பேரவையில் பொது பிரச்னையை பாஜக தொடர்ந்து எழுப்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார். டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றிக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு கெஜ்ரிவால் அரசு பணியாற்றும் என்று நம்புவதாகவும் ட்விட்டர் பதிவுகளில் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
Comments