மா.சுப்பிரமணியன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

0 750

திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியத்துக்கு எதிரான நில அபகரிப்பு புகார் குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய சிட்கோ பொது மேலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ நிலத்தை மா.சுப்ரமணியம் அபகரித்ததாக எழுந்த புகார் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், நிலத்தை மீட்க கோரிய புகார் மீது நடவடிக்கை இல்லை எனக் கூறி சிட்கோ பொது மேலாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

அதனை விசாரித்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க பொது மேலாளருக்கு உத்தரவிட்டும், 11 மாதங்களாக நடவடிக்கை இல்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வு, புகாரில் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய சிட்கோ பொது மேலாளர் முருகேசனுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments