பேருந்துக்குள் நடனமாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஓட்டுநர் பணியிடை நீக்கம்

0 1572

மும்பையில் பேருந்துக்குள் நடனமாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நவிமும்பை மாநகராட்சி போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் யோகிதா மானே என்பவர், டிக்-டாக் வீடியோவில் பேருந்துக்குள் சீருடையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பணி நேரத்தில் டிக்-டாக் வீடியோவில் நடனமாடியது தெரிய வந்ததை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதே சமயம் இந்த வீடியோவை தான் எடுக்கவில்லை என்றும், இடைவேளை நேரத்தில் அங்குள்ள பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர்தான் தன்னை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார் எனவும் அந்த பெண் ஓட்டுநர் விளக்கமளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments