அடுத்த 5 ஆண்டுகளுக்கும் டெல்லியில் நல்லாட்சியை தொடர்வது தான் இலக்கு - அரவிந்த் கெஜ்ரிவால்

0 2396

அடுத்த 5 ஆண்டுகளுக்கும் டெல்லியில் நல்லாட்சியை தொடர்வது தான் இலக்கு என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலையில் தொடங்கியது முதல் அதிக இடங்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர். இதனால் கெஜ்ரிவால் வீட்டிலும், ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்திலும் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த கொண்டாட்டத்தின் இடையே, ஆம் ஆத்மி அலுவலகத்தில், கட்சித் தொண்டர்களிடையே கெஜ்ரிவால் மாலையில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வைத்து 3ஆவது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டார். தங்களது மகனாக தன்னை கருதி டெல்லி மக்கள் வாக்களித்து இருப்பதாகவும், இத்தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றி டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

புதுவகையிலான அரசியலின் தொடக்கம் இது என்றும், இது ஒரு புதிய சகுனம் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி மக்களை இறைவன் ஹனுமான் ஆசீர்வதித்து விட்டதாக கூறிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றி, பணிகளை அடிப்படையாக கொண்ட அரசியலுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments