யானைக்குட்டிக்கு முதன்முறையாக செயற்கைக்கால் பொருத்தம்
கம்போடியோவில் வேட்டைக்காரனின் கண்ணிவலையில் சிக்கி காலை இழந்த யானைக்குட்டிக்கு முதன்முறையாக செயற்கைக்கால் பொருத்தி மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு வனத்தில் மோசமான உடல்நிலையுடன் கிடந்த 2 வயது யானைக்குட்டியை மீட்டு வனத்துறை ஊழியர்கள் பராமரித்து வந்தனர். வார வாரம் காலில் சேதமடைந்த திசுக்களை அகற்றி மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது யானைக்குட்டிக்கு செயற்கைக்கால் பொருத்தி மருத்துவர்கள் புது முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலையில் மீட்கப்பட்ட யானைக்குட்டி, செயற்கைக்காலுடன் உற்சாகமாக வலம் வருவது நெகிழ்ச்சியளிப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments