அண்ணாநகரில் 17 இடங்களில் தொடர்ச்சியாக கொள்ளை அடித்த முருகனிடம் இருந்து ஒரு கிலோ தங்க நகைகள் பறிமுதல்
கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில், சென்னை அண்ணாநகரில் 17 இடங்களில் தொடர்ச்சியாக கொள்ளை அடித்த திருவாரூர் முருகனிடம் இருந்து, ஒரு கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான திருவாரூர் முருகன், சென்னை அண்ணா நகர் தொடர் கொள்ளை வழக்கில் தொடர்புடையவன் ஆவான்.
பெங்களூர் சிறையில் இருந்த முருகனை, போலீஸ் காவலில் எடுத்து, சென்னை அண்ணா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சென்னை அண்ணா நகரில் கொள்ளையடித்த நகைகளை, மதுரை மற்றும் திருச்சியில் பதுக்கி வைத்திருப்பதாக கொள்ளையன் முருகன் கூறியதை அடுத்து, அங்கு அவனை அழைத்துச் சென்று, ஒரு கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
Comments