திமுகவினர் தாங்களாகவே சென்று விஜய்க்கு ஆதரவு அளிக்கின்றனர் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

0 958

திமுகவினர் தாங்களாகவே சென்று நடிகர் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துக் கொண்டார். விழாவில் 477 பயனாளிகளுக்கு 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  மிக்ஸி, கிரைண்டர், தையல் மெஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நாடாளுமன்றத்தில் விஜய் குறித்து பேசி, திமுக தனது சுயநலத்தை வெளிப்படுத்தியதாக விமர்சித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments