திரைப்படங்களின் வசூல் விபரம் வெளியிட தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு

0 1717

தெலுங்கு திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்கின்றன எனும் விபரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு திரைப்படம் எவ்வளவு வசூலை பெறுகிறது எனும் விபரத்தை பெரும்பாலும் எந்த மொழி திரையுலகமுமே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது கிடையாது.  தெலுங்கில் அண்மையில் வெளியான மகேஷ்பாபுவின் சரிலேரு நீக்கெவரு, அல்லு அர்ஜூனின் அலா வைகுந்தபுரம்லோ ஆகிய படங்கள் பொய்யான வசூல் விபரங்களை போட்டி போட்டிகொண்டு அறிவித்ததாகவும் திரைவட்டாரத்தில் புகார் எழுந்தது.

இந்நிலையில், இதற்கு முடிவுகட்ட திட்டமிட்டுள்ள தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம், படங்களின் உண்மையான வசூல் விபரங்களை தயாரிப்பாளர்கள் கில்டு மூலமாக அதிகாரப்பூர்வமாக வெளியிட முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற கோடை விடுமுறையிலிருந்து புதிய முறை அமலுக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments