3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
மவுன்ட் மெளன்கனோய் (Mount Maunganui) பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்களை சேர்த்தது. கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி 112 ரன்களை குவித்தார்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதல் பதற்றமின்றி விளையாடியது. தொடக்க வீரர் கப்தில் 66 ரன்களும், நிகோல்ஸ் 80 ரன்களும், கிரான்ட்ஹோம் 58 ரன்களும் சேர்க்கவே, 48ஆவது ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 300 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. போட்டி நாயகனாக நிகோல்ஸும், தொடர் நாயகனாக டெய்லரும் அறிவிக்கப்பட்டனர்.
டி20 தொடரை 5க்கு பூஜ்யம் என்று இந்திய அணி ஒயிட்வாஸ் செய்த நிலையில் ஒரு நாள் தொடரை 3க்கு பூஜ்யம் என நியுசிலாந்து ஒயிட்வாஸ் செய்து பதிலடி கொடுத்துள்ளது.
Comments