ஆஸ்கர் விருதுகள் வென்ற "பாரசைட்" நடிகர் விஜய் நடித்த மின்சார கண்ணாவை போல உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம்

0 1446

4 ஆஸ்கர் விருதுகளை வென்ற பாரசைட் என்ற கொரிய திரைப்படம், தமிழில் நடிகர் விஜய் நடித்த மின்சாரக் கண்ணா கதையை போல உள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர்.

கொரிய படமான பாரசைட்,சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்நிலையில், பணக்கார கதாநாயகனின் காதல் வெற்றி பெறுவதற்காக, அவரது குடும்பமே ஏழைகளாக மாறி நடிக்கும் மின்சார கண்ணா படத்தின் கதையில் சற்று மாற்றம் செய்து உருவாக்கப்பட்டதைப்போல பாரசைட் படம் உள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த மின்சாரக்கண்ணா, 1999 ஆம் ஆண்டிலேயே வெளியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments