இந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லிக்கு நன்றி - பிரசாந்த் கிஷோர்

0 1404

ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ள டெல்லி மக்களுக்கு நன்றி என, அக்கட்சிக்கு அரசியல் வியூகம் வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் வெற்றிக்கனியை பறித்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதில் முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தவர், அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் வல்லவர் என கருதப்படும் பிரசாந்த் கிஷோர். இந்தியாவின் ஆன்மாவை பாதுகாப்பதில் உறுதியாக நின்ற, டெல்லிக்கு நன்றி என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Thank you Delhi for standing up to protect the soul of India!

— Prashant Kishor (@PrashantKishor) February 11, 2020 ">

ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கும் நேரில் சென்ற பிரசாந்த் கிஷோர், கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தார். பீகார் முதலமைச்சருக்கு நெருக்கமானவராக இருந்த பிரசாந்த் கிஷோர், கூட்டணிக் கட்சியான பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வந்தநிலையில், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments