கடலூரில் அமையும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையால் விவசாயத்திற்கு பாதிப்பில்லை

0 1029

கடலூர் மாவட்டத்தில் அமையவுள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையால் மக்களுக்கும் விவசாயத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் தெரிவித்துள்ளார்.

அரசு துறைகள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்கள் பொருட்களை கொள்முதல் செய்ய ஏதுவாக உருவாக்கப்பட்ட "அரசு மின்னணு சந்தை"(GeM) மூலம் அதிகளவில் பயனடைவது தொடர்பான கருத்தரங்கு சென்னை கலைவாணர் அரங்கில்  நடைபெற்றது. அதில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் துறை சார்ந்த அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்டத்தில் அமையும் பெட்ரோகெமிக்கல் ஆலையால் அன்னிய முதலீடு அதிகரிப்பதோடு, 5000 பேர் நேரடியாகவும், 20 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments