அழிந்து வரும் பறவை இனமான கானமயில்களை பெருக்க நடவடிக்கை
முட்டைகளை சேகரித்து, இங்குபேட்டர் மூலம் குஞ்சுபொரிக்க செய்து, அழிந்து வரும் பறவை இனமான கானமயில்களை பெருக்குவதில், மத்திய வனத்துறை கவனம் செலுத்தி வருகிறது.
அழிவின் விளிம்பில் உள்ள இந்த பறவை இனத்தில், ராஜஸ்தான் பகுதியில் சுமார் 150 கானமயில்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. இந்நிலையில், கானமயில் இனத்தை பாதுகாக்க, சுமார் 420 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தின் கீழ், ராஜஸ்தானின் இனப்பெருக்க மற்றும் வளர்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கானமயில்களை உயிரியல் வல்லுநர்கள் கண்காணித்து, அவை இடும் முட்டைகளை பாலைவனப் பகுதியில் இருந்து கவனமாக சேகரித்து வந்து, இங்குபேட்டர் மூலம் பராமரித்து குஞ்சு பொரிக்க செய்கின்றனர். அப்படி அண்மையில் முட்டையில் இருந்து பொரிந்த 9 கானமயில் குஞ்சுகள் நன்றாக வளர்ந்து வருகின்றன. இத்தகைய முயற்சியின் மூலம் கானமயில் இனத்தை பெருக்க முடியுமா என்பதை தற்போது ஆய்வு செய்ய உள்ளனர்.
Comments