அமெரிக்க அதிபர் டிரம்பை விசாரணை செய்யக் கோரி அமேசான் வழக்கு

0 1275

அமெரிக்க ராணுவத்திற்கு, JEDI எனப்படும் Joint Enterprise Defense Infrastructure Cloud அமைப்பை ஏற்படுத்துவதில், தங்களைப் புறக்கணித்து விட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக அதிபர் டிரம்ப், செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ள அமேசான் நிறுவனம், அதற்காக அவரையும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பெரையும் (Mark Esper) நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளது.

10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை மைக்ரோசாப்டுக்கு ஒதுக்குவதில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் அதிகாரம் செலுத்தியதாகவும் அமேசான் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளது. ஒப்பந்தம் முடிவு செய்யப்படும் நேரத்தில், அமேசானை ஒழித்துக் கட்டுமாறு டிரம்ப் உத்தரவிட்டார் என்பதை கண்டுபிடித்துள்ளதாகவும் அது மனுவில் தெரிவித்துள்ளது. அமெரிக்க நடுவண் அரசின் கொள்முதல் நடைமுறைகளில், அதிபர் பதவியை துஷ்பிரயோகம் செய்து டிரம்ப் தனிப்பட்ட ஆதாயங்களை தொடர்ந்து தேடுவதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments