வெட்டுக்கிளி படையெடுப்பை கட்டுப்படுத்தாவிடில் பேரழிவை சந்திக்க நேரிடும் - ஐ.நா

0 2857

ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்தாவிடில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஐநா எச்சரித்துள்ளது.

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் உரையாற்றிய உணவு மற்றும் வேளாண் அதிகாரி கீத் க்ரெஸ்மேன்(Keith Cressman), உள்நாட்டு போரால் ஏற்கனவே உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வரும் சூடான் நோக்கி வெட்டுக்கிளி படை நகர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.imageபென்சில்வேனியா, நியூயார்க், நியூஜெர்சியில் உள்ள மொத்த மக்களுக்கு தேவையான ஒரு வேளை பயிர்களை இந்த வெட்டுக்கிளி கூட்டம் ஒரே நாளில் தின்று சேதப்படுத்தக்கூடியவை என்றும் இதனால் ஆப்ரிக்க நாடுகளில் உணவு தட்டுப்பாடு தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஐநா அதிகாரி கீத் தெரிவித்துள்ளார்.

image

மழைக்கு பிறகு இந்த வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கக்கூடும் என்பதால் துரிதகதியில் நடவடிக்கை தேவை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments