வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் வீதிகளில் இறங்கி போராட்டம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அரசுக்கு எதிராக வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கண்டித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பலன் பெறுவதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்றும் கோஷமிட்டனர்.
Comments