அதிமுக தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக ஆலோசனை

0 895

கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 2ஆவது நாளாக ஆலோசனை நடத்தினர்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 2ஆவது நாளாக நடத்தப்பட்ட ஆலோசனையில், திருவண்ணாமலை, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுடன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆலோசனை நடத்தினர்.

திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்கிறது என்று முதலமைச்சர் பேசியதாக தகவல் வெளியானது. அதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments