விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவர் கைது

0 899

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளுக்கு முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 2 கிராம நிர்வாக அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, டிஎன்பிஎஸ்சி 2ஏ தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 2016ஆம் ஆண்டு விஏஓ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலமானது.

இந்த முறைகேடுகளில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை, 7 நாள் காவலில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று மேலும் 2 கிராம நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்கிற விவரங்களை சிபிசிஐடி இன்னும் வெளியிடவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments