வேளாண் மண்டலமாக மாற்றும் நடவடிக்கை : முதலமைச்சருக்கு நெடுவாசல் போராட்டக்குழு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டக் குழுவினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெடுவாசல் கிராம போராட்ட குழுவினர், முதலமைச்சரின் அறிவிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றனர்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை சட்டமாக்கவும், சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றவும் அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர். காவிரி உபரி நீரை நெடுவாசல் கிராமத்திற்கு திருப்புவதற்காக நிதி ஒதுக்குவதாக முதலமைச்சர் தெரிவித்ததாகவும் நெடுவாசல் போராட்டக் குழுவினர் கூறினர்.
Comments