அழகாகின்றன சென்னை சாலைகள்... 'மெகா ஸ்ட்ரீட்ஸ்' திட்டம் ...!

0 1179

சென்னையில் சாலைகளை மேம்படுத்தி அழகுபடுத்தும் வகையில் மெகா ஸ்ட்ரீட்ஸ் என்ற திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதற்கட்டமாக அண்ணா நகர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும் அடையாரில் 110 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் இந்தத் திட்டத்தின் மூலம் 30 ஆண்டுகளுக்கு சாலைகள் சேதப்படுத்துவது தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.சென்னையை தொடர்ந்து கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாநகாட்சிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

image

இந்தத் திட்டத்தின் மூலம் நடந்து செல்வோர், மிதிவண்டியை பயன்படுத்துவோருக்கு தனித் தனி பாதைகள் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் நடைபாதை இருக்கைகள், உயர் ரக மின் விளக்குகள் அமைக்கப்படும். முறையான பார்க்கிங் வசதி, சுரங்கப்பாதை வசதிகள், நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். மின் வயர் உள்ளிட்ட இணைப்புப் பணிகள் மாற்றியமைக்கப்படும்.

ரயில் நிலையங்கள், பறக்கும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றை இணைத்து இத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. பள்ளிகள், அங்கன்வாடிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள், நீர்நிலைகள், மார்க்கெட்டுகள் உட்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களை இணைத்து திட்டம் செயல்படுத்தப்படும். பொது இடங்களை மறுசீரமைக்கும் திட்டம், நீர்நிலைகளை இணைத்து பசுமை வழித்தடம் திட்டம், பாலங்கள், சுரங்கப்பாதைகள் மறுசீரமைப்புத் திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்படவுள்ளன. அண்ணாநகர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, அடையாறில் 72 சாலைகள் மறு வடிவமைப்பு செய்யப்படவுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments