ஈபிள் டவர் முன்பு வைத்து காதலை தெரிவித்த இளைஞர்
ஈபிள் டவர் முன்பு தனது தோழியிடம் இளைஞர் ஒருவர் திரைப்பட பாணியில் காதலை முதல்முறையாக வெளிப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவுகிறது.
நியூயார்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் சியாம் ஷாவும்,மும்பையில் பணிபுரியும் சிவானி பாப்னாவும் ஒன்றரை ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் முன்பு வைத்து சிவானியிடம், தனது நண்பர்கள், குடும்பத்தினர் முன்பு ஹிந்தி பட பாடல்களை பாடிக்கொண்டு நடனமாடியபடி வந்து காதலை சியாம் ஷா கூறினார். காதலை சிவானி ஏற்றதும், மோதிரத்தை அவரது கைவிரலில் சியாம் ஷா அணிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், இணையதளத்தில் வெளியாகி, அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.
Comments