இந்தியப் பங்குச்சந்தைகளில் உயர்வுடன் வர்த்தகம்

0 1175

இந்தியப் பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து இன்று வர்த்தகமானது.

வங்கி, உலோகம், ஆட்டோ மொபைல் துறைகளின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 435 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 420 புள்ளிகளாக வர்த்தகமானது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஒரு கட்டத்தில் 124 புள்ளிகள் உயர்ந்து 12 ஆயிரத்து 150 புள்ளிகளாக வர்த்தகமானது.

நிஃப்டியின் துறை சார் அனைத்து குறியீடுகளுமே உயர்வுடன் வர்த்தகமாகின. உலோக துறைசார் குறியீடு 1.4 சதவீத உயர்வுடன் வர்த்தகமானது. டெல்லி தேர்தல் முடிவுகள் உள்ளிட்டவற்றின் தாக்கமே உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments