ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை
ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டி தீர்த்ததால் கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வந்த வறட்சியின் தாக்கம் தணித்துள்ளது. அந்நாட்டின் சிட்னி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் முழ்கின. மேலும் முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படும் வாரகம்ப அணை பல ஆண்டுகளுக்கு பிறகு 62 சதவீதம் நிரம்பியது. அதேபோல் நியூசவூத் வேல்ஸ் மாநிலத்திலும் வற்றிபோன அணைகள் நிரம்பியுள்ளன.
அணைக்கமுடியாமல் கொளுந்துவிட்டு எரிந்துவந்த புதர்த் தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், புதர்த்தீயால் பாதிக்கப்பட்ட வனங்கள், தற்போது பெய்து வரும் கனமழையால் புத்துயிர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டனர்.
Comments