அமெரிக்காவிடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்க இந்தியா ஒப்பந்தம்
இந்தியக் கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாத இறுதியில் டிரம்ப் இந்தியா வரத்திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக, கடற்படைக்கு எம் ஹெச் 60 ஆர் சீ ஹாக் ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்புதல் அளிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் அதிகபட்ச வரி விதிக்கப்படுவதாக சமீபத்தில் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில் அவரது கவனத்தைக் கவரும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments