சிரியாவில் 115 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக துருக்கி தகவல்

0 731

தங்களது வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக சிரியாவில் தாக்குதல் நடத்தி 101 பேரைக் கொன்றுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் 115 அரசு நிலைகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 101 பேர் கொல்லப்பட்டதாகவும் துருக்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்கள் வீரர்களின் மீதான எந்த ஒரு தாக்குதலையும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கூறிய அவர், ஒவ்வொரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். தங்களது தாக்குதலில் 3 டேங்குகள், 2 மோர்ட்டார் ரக வாகனங்கள் ஒரு ஹெலிகாப்டரும் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments