வங்கி முறைகேடு விவகாரம் : 6 வங்கிகளின் முன்னாள் தலைவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை
வங்கிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆறு வங்கிகளின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் நிதியமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் தலைவர் உஷா அனந்தசுப்ரமணியன், யுனைட்டட் வங்கி முன்னாள் மேலாண் இயக்குநர் அர்ச்சனா பார்கவா, யுகோ வங்கியின் முன்னாள் தலைவர் அருண் கவுல் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Comments