சுற்றுலா தொடர்பான ஒப்பந்தங்களுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்படுவது கொரோனா தாக்குதலால் தாமதமாகி உள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா, சீனா, பாகிஸ்தான், எஸ்டோனியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளுடன் சுற்றுலா தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளாகக் குறிப்பிட்டார்.
இவை தவிர தென் ஆப்பிரிக்கா, ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட துறைகளை உயர்த்துவது, சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பது உள்ளிட்ட திட்டங்கள் கைவசம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆனால் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் சுற்றுலாத்துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ள அவர், விரைவில் சுற்றுலா தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Comments