Polimer News
விளையாட்டு

நீண்ட கால கனவு நனவாகி இருப்பதாக தினேஷ் கார்த்திக் உற்சாகம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றதன் மூலம் கனவு நனவாகி இருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக உள்ள அவர், தனக்கு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பது உற்சாகத்தை அளித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

இது ஒரு கனவு எனக் குறிப்பிட்ட தினேஷ் கார்த்திக், நீண்ட காலத்திற்குப் பின் கனவு நனவாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

Polimer News