Polimer News
Big Story விளையாட்டு

தோனிக்கு 2, 3 போட்டிகளிலாவது தடை விதித்திருக்கவேண்டும்- சேவாக்

நடுவரின் தீர்ப்புக்கு எதிராக நடந்துகொண்ட தோனிக்கு, போட்டி நாளுக்குரிய சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டதற்கு பதிலாக, இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்கலாம் என முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் கடந்த 11ஆம் தேதி நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நோ பால் தர மறுத்த நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி குறித்து பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சென்னை அணி வெற்றிக்காக இவ்வளவு கடுமையுடன் நடந்துகொள்ளும் தோனி, இந்திய அணி வெற்றிக்காக இதுபோல நடந்துகொண்டதில்லை எனவும் வீரேந்தர் சேவாக் குற்றஞ்சாட்டினார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கேப்டன்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்கலாம் எனவும் சேவாக் தெரிவித்தார்.

Related posts

Polimer News