Polimer News
அரசியல்

காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே தொடரும் வார்த்தை மோதல்

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஆம் ஆத்மி முட்டுக்கட்டை போடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகளை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் முன்வந்த போதிலும், கெஜ்ரிவால், தமது நிலைபாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் கூட்டணிக்கான கதவுகள் இன்னமும் திறந்தே உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் கருத்தை மறுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தமது நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் கூறியுள்ளார்.

ராகுல் காந்திக்கு கூட்டணியில் நம்பிக்கை இல்லை என்றும், விளம்பரம் தேடுவதில் குறியாக இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

Related posts

Polimer News