Polimer News
சற்றுமுன் தமிழ்நாடு முக்கிய செய்தி

எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் தமிழகம் வளர்ச்சி அடையும் – முதலமைச்சர்

எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் தமிழகம் வளர்ச்சி அடையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது காங்கேயம் காளையின் சின்னம் அமைக்கப்படும் என்றும், அதை தாமே திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை வசதிகள் தேவை எனக் கூறிய அவர், 8 வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசுடையது எனக் கூறினார். 8 வழிச்சாலையால் தமிழகம் வளர்ச்சி அடையும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால் அதை ஸ்டாலினுக்குத்தான் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் சாடினார்.

Related posts

Polimer News