Polimer News
சற்றுமுன் தமிழ்நாடு

4 தொகுதி இடைத் தேர்தல் : வாக்காளர்களுக்கு நடு விரலில் மை

நான்கு தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும் என்று என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

வரும் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் போது, வழக்கமான முறையில் ஆட்காட்டி விரலில் மை வைக்கப்படும்.

இந்நிலையில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும்போது ஏற்கனவே வைத்த மை அழியாது என்பதால் நடு விரலில் மை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினரால் இதுவரை 170 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

 

Related posts

Polimer News