Polimer News
உலகம்

மனவளர்ச்சி குன்றிய இளைஞரை அடித்து உதைத்த புத்த பிக்கு

தாய்லாந்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞரை புத்த பிக்கு ஒருவர் அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

சமுத் பிரகான் என்ற கோயிலில் புத்த பிக்குவாக இருப்பவர் பரா சதித் ((Phra Sathit)). இந்தக் கோயிலில் மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த இளைஞரான நோக் என்பவரை திடீரென சரமாரியாக அடித்து உதைத்தார்.

இதில் மனவளர்ச்சி குன்றிய நோக் காயமடைந்தார். நோக் தாக்கப்பட்ட காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இது தொடர்பான புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

Polimer News