Polimer News
உலகம்

பிரேசிலில் நடந்த வினோத கார் பந்தயம்

பிரேசிலில் பொழுதுபோக்குக்காக நடைபெற்ற வினோத கார் பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். சாவ் பாவ்லோ நகரில், புத்துணர்வு பானமான RED BULL சார்பில் என்ஜினில்லாமல் இருவர் மட்டும் இயக்கி செல்லும் கார் பந்தயம் நடைபெற்றது.

இதில் 70 பேர் பங்கேற்று, படைப்பாற்றல் திறன் மூலம் உருவாக்கப்பட்ட என்ஜின் இல்லா கார்களை ஓட்டி சென்றனர்.

குறிப்பாக காஸ்டேங், வாத்து, பிரமிடு, angry birds, உள்பட பல்வேறு வடிவில் உருவாக்கப்பட்ட கார்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த தடைகளை தாண்டி போட்டியாளர்கள் ஓட்டி சென்றனர். இந்த வினோத போட்டி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Related posts

Polimer News